இயற்கை வழி வீட்டு தோட்ட பயிற்சி - 8

 இயற்கை வழி வீட்டு தோட்ட பயிற்சி - 8☘️🍀🌿🌱🪴🎋🍃🌾


தேதி:  04/07/2021 

 

நேரம்:3:30 PM to 5:00 PM


Topic: ஆடிப்பட்டம் தேடி விதை 

கேள்வி பதில்கள் பகுதி - 2



இந்த நிகழ்வில் விதைப்புக்கு தயாராக இருக்கும் போது தங்களுக்கு ஏற்படும் வீட்டு தோட்டம் பற்றிய அனைத்து சந்தேகங்களுக்கும் விடை கிடைக்கும்


Mr. Balaraman Maneri

Mrs.V.Priya Rajnarayanan 


பயிற்சி ஒருங்கிணைப்பாளர்கள்

Mrs. Ajitha Veerapandian-9500321318

Mrs. Akila Kunalan-9962583057


ஒவ்வொரு வாரமும் நடைபெறும். அனைவரும் பங்கேற்று வீட்டுக்கு ஒரு விவசாயி ஆகலாம்


குறிப்பு: பயிற்சி சரியாக 3.30 PM ஆரம்பித்து  5.00PM முடிந்து விடும்.


seedsisland Team is inviting you to a scheduled Meeting



நமக்கான முதல்தர உணவு கனிகள்தான்! Fruits

 நமக்கான முதல்தர உணவு கனிகள்தான்!

அரசும் மீடியாவும் பிரபலங்களும்...மரம் நிழல் தரும், காற்று தரும், மழை தரும்னு சொல்லுவாங்க...

 ஆனா கனி தரும்னு மட்டும் சொல்லவே மாட்டாங்க. ஏன்?


இப்ப சாலையோரம் வைத்திருக்கும் மரம், அரசு பள்ளி, மருத்துவமனை, அலுவலகங்கள் இங்கெல்லாம் இருக்கும் மரங்களை கவனியுங்கள்.... அங்கு கனி தரும் மரங்கள் எதுவுமே இருக்காது.

ஏன்? 


எங்கெல்லாம் புளிய மரம் நிறைய உள்ள சாலைகள் உள்ளதோ அந்த சாலைகளையெல்லாம் விரிவு படுத்துகின்றேன் என்று அரசு அந்த புளிய மரங்களை வெட்டிவிடும். விரிவாக்கத்திற்கு பின் வெத்து மரங்களையே நடும். 


அரசும் தொண்டு நிறுவனங்களும் வெத்து மர்மங்களை மட்டுமே நடும்.


Lock down னில் பல ஆயிரம் பேர் பல கிலோமீட்டர் ரோட்டில் பசியோடு நடந்து சென்றனர். அப்பொழுதும் கூட அந்த மக்கள் காய் கனி மரங்கள் இருந்தால் பசிக்கு உணவாகுமே என சிந்திக்கவில்லை.


எனக்கு தெரிந்து ... ஏன் கனி தராத மரங்களை மட்டுமே நடுகின்றனர் என எவரும் சிந்திக்கவில்லை.


நாமெல்லாம் குரங்கிலிருந்து பிறந்தோம் என்றால் நமது முக்கிய உணவே பழம்தானே. ஆனால் நாமே சிந்திக்கவில்லையே. மா பலா நாவல் அத்தி கொய்யா.... என்று எத்தனை மரங்கள் உள்ளன. அவையெல்லாம் ஏன் நடப்படவில்லை. நம் சிந்தனையை எப்படி மழுங்கடித்தனர்.


காரணம்

MMMC: mass media mind control.


மரம் கனி தரும் என்ற வார்த்தையை எல்லா விதத்திலும் மறைத்தனர். தொடர்ந்து மரம் நிழல் தரும் காற்று தரும் மழை தரும் என்று மட்டுமே சொன்னார்கள்.... அதை மட்டுமே மனிதர்களும் நினைத்து கனியை மறந்தான்.


கனி நமக்கான ஊட்டச்சத்து நிறைந்த உணவு .


ஆனால் இதையெல்லாம் தடுத்து கார்பரேட் ஊட்டச்சத்து உணவு என்று கண்ட குப்பைகளை நம்மிடம் திணிக்கிறது. அதையெல்லாம் ஏதோ ராயல் ஃபேமிலி போல ஸ்டைலா வாங்கி தின்னு உடம்பு நாசமா போனதுதான் மிச்சம். கார்பரேட்டுக்கோ ஏகபோக லாபம்.


நல்லா புரிஞ்சிக்குங்க இயற்கையிலிருந்து நாம் இலவசமாக எதையும் பெற்றுவிடக்கூடாது என்று கார்பரேட் தெளிவா செயல்படுறாங்க.


பூமியில் பிறந்த அனைத்து உயிரினங்களுக்கும் இயற்கையாகவே உணவு படைக்கப்பட்டிருக்கிறது.


அதை முழு முற்றாக தடுத்து பணத்தால் மட்டுமே எதையும் வாங்க முடியும் என்ற நிலையை உருவாக்குகிறது கார்பரேட்..


நீங்கள் கற்பனை பண்ணி பாருங்கள் கருவை மரங்கள் உள்ள இடங்களிலும் மற்றும் அனைத்து இடங்களிலும் மா, பலா, வாழை, நாவல் போன்ற மரங்கள் இருந்தால் இந்த இடமே சொர்க்கமாக காட்சி அளிக்கும். தை மாதங்களில் பூத்து குலுங்கும். உணவுப் பஞ்சம் என்ற ஒன்றே இருக்காது.

நம் மனநிலையே ஆனந்தமாக இருக்கும் . உண்மையான சொர்க்கத்தை நாம் அனுபவிக்கலாம். நீங்கள் மீண்டும் மீண்டும் இதே போல் கற்பனை செய்து வெளி உலகத்துக்கு வந்து பாருங்கள்....


அப்பொழுது உங்களுக்கு தெரிவதெல்லாம் கிரிக்கட் மைதானங்களும் கருவை மரங்களும் மற்ற வெற்று மரங்களும் உள்ள வரண்ட பூமியைத்தான். 

ஒரு சொர்க்க பூமியை இப்படி நரகமாக்கிவிட்டு ரேசன் கடையில் புழுத்துப்போன அரிசிக்கு வரிசையில் நிற்கிறோம்.


மீடியாக்கள் சொல்வது மட்டுமே உலகில் உள்ளதாகவும் நடப்பதாகவும் நம்புவது அறியாமையின் உச்சம். மீடியாக்கள் ஒட்டுமொத்த உண்மையை மறைத்துள்ளது.


மீடியா ஒரு ஈவு இரக்கமற்ற மாபெரும் பயங்கரவாதி. 


கார்பரேட் அறிவாளியல்ல... நாம் சிந்திக்கவில்லை அவ்வளவே.


மனிதன் சிந்திக்காதவரை இவையெல்லாம் தொடர்ந்து கொண்டேதான் இருக்கும்.

பஞ்சம் தீர்க்கும் பஞ்சகாவியம் செய்முறை Panchakavya seya murai vilakkam

 அனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள் 

(நன்றி திரு நம்மாழ்வார் ஐயா) 

பஞ்சம் தீர்க்கும் பஞ்சகாவியம் செய்முறை:- 

மாட்டுச் சாணம் ஒரு கிலோ,பசு கோமியம் ஒரு லிட்டர் ,பசும்பால் அரை லிட்டர்,பசு தயிர் அரை லிட்டர் பசுநெய் 150 மில்லி நான்கைந்து கனிந்த வாழைப் பழங்கள் கரும்பு சக்கரை 250 கிராம் கரும்புச்சாறு கால் லிட்டர் இவைகள் அனைத்தும் மூலப்பொருள்கள் ஆகும்

10 லிட்டர் கொள்ளளவு உள்ள மூடி உள்ள பிளாஸ்டிக் பக்கெட்டில் முதல்நாள் சாணியையும் நெய்யையும் நன்றாக கலந்து மூடி வைக்க வேண்டும் ஒரு முப்பது முறை இரண்டு நாட்களுக்கு கலக்கவேண்டும் அதற்குப் பிறகு மீதி அனைத்தையும் பொருள்களையும் அதனுடன் இணைத்து காலையில் 50 முறையும் மாலையில் 50 முறையும் கடிகார சுற்றில் கலக்கவேண்டும் அனைத்து பொருளையும் கலக்கும் நாளிலிருந்து ஏழு நாட்கள் கழித்து பஞ்சகவ்யத்தை உபயோகிக்கலாம் ஒரு லிட்டருக்கு முதல் முறை செடிகளுக்கு அடிக்கும் பொழுது ஒரு லிட்டர் தண்ணீருக்கு 100 மில்லி கலக்கவேண்டும் அதற்குப் பிறகு 50 மில்லி போதும் 15 நாட்களுக்கு ஒரு முறை உபயோகிக்கலாம் பஞ்சகாவியம் தயாராகிய பின் தினமும் காலையோ அல்லது மாலையோ ஒரு முறை 30 தடவை கலக்கினால் போதும் (பின்குறிப்பு கலக்கும் குச்சியை நன்றாக கழுவி வைத்து உபயோகிக்க வேண்டும்)🙏

நாளைய கழிவு நீக்கங்கள் Clean your body part internally to live healthy