இரைப்பை சுத்தம் | 30 நாள் ஆரோக்கிய பயணம் | இயற்கை வாழ்வியல் பயணத்தை செய்யலாம் Perfect Health in Natural Way | Organic health tips

 இரைப்பை சுத்தம்

8 டம்ளர் நீர் ( 1 1/2 லிட்டர் )... மிதமான குடிக்கும் அளவு சூடு ( warm water ), அதில் 1 டம்ளர் நீர் எடுத்து 2 1/2 ஸ்பூன் இந்துப்பு நன்றாக கலந்து, மொத்த நீரில் கலக்கவும், 


அந்த நீரை சுவைத்துபார்த்தால் நம் கண்ணீரில் உள்ள உப்பின் சுவை இருக்கவேண்டும், அதிக உப்பாக இருந்தால் கூடுதல் நீர் சேர்க்கலாம், ஒவ்வொரு டம்ளராக குடிக்கவும், குடித்து முடித்து பெருவிரலை வைத்து லேசா வாயில் மேலண்ணத்தில் தொட்டால் வாந்தியாக அனைத்து கழிவுகளும் வரும், இரண்டு டம்ளர் குடித்ததும் வாந்தி வந்தாலும் எடுக்கலாம், இதை செய்யும் நேரம் 5 முதல் 7 மணிக்குள் இருப்பது நல்லது, இந்த நேரம் உடல் கழிவுகள் நீக்கும் நேரமாகும், 


எந்த வித பக்கவிளைவும் இல்லாத கழிவு நீக்க இது, இதை தொடர்ந்து 10 நாள் செய்துவர 5 கிலோ எடை குறைக்கலாம் ( எடை குறைக்க நினைப்பவர்களுக்கு )....


இந்த கழிவுநீக்க முறையினால் தீரும் நோய்கள்


முடக்குவாதம்

மூட்டுவலி

நெஞ்செறிச்சல்

கட்டிகள் நீங்கும்

குடல் அலர்ஜி

அல்சர்


இந்த கழிவு நீக்க முறையை கர்ப்பமாக உள்ள பெண்கள் செய்யவேண்டாம், ஏன்னா அவங்களுக்கு இயற்கையாகவே இது நடக்கும்...முதல் மூன்று மாதம்...



இந்த கழிவுநீக்க பயிற்சியை அனைவரும் ( விருப்பம் உள்ளவர்கள் ) நாளை செய்யலாம்... அனைவரும் உங்கள் அனுபவங்கள், சந்தேகங்கள் பதிவு செய்யலாம், நன்றி 🙏

இந்த 30 நாள் பயிற்சிகள் அனைத்தும் நீங்க வெளியில் போய் படிச்சா 35,000 ஆகும், இதில் மண்குளியல் தனியா 1000 ரூபாய், வாழைஇலைகுளியல் 1000, மூக்குகழுவுதல், கண் கழுவுதல், எனிமா 1000 நாம அங்கேயே செய்துபார்க்கனுமுனு சொன்னா 1000 , பார்க்கமட்டும் 35,000.....


இங்க உங்களுக்கு இலவசமா கிடைக்கிறது, காரணம் நீங்க செய்துபார்த்து தெரிஞ்சிகிட்டா, ஒருத்தர் 1000 பேரை மாற்றலாம், 


இது மருந்தில்லா செலவில்லா மருத்துவம், அன்றாட வாழ்க்கை மாறினால் மருத்துவ செலவு அவசியமில்லை, புதுபுது நோய்களுக்கு என்றுமே பயப்படவேண்டாம்....


உங்க செளகர்யம் எப்படி னு பார்துக்கோங்க......


இயற்கை வாழ்வியல் பயணத்தை செய்யலாம் Perfect Health in Natural Way | Organic health tips

 அனைவருக்கும் வணக்கம் 🙏


நாளை முதல் நாம் எல்லோரும் இணைந்து இந்த இயற்கை வாழ்வியல் பயணத்தை செய்யலாம்.....செய்யமுடியாதளவு இந்த வாழ்வியல் கடினமான விஷயங்கள் இல்லை,


 ஒரு 50 வருடத்திற்கு முன் நம் முன்னோர் வாழ்ந்த வாழ்வியல் தான், அன்று மருத்துவர்கள் நம்மை தேடி வந்தார்கள், இன்று நாம் அவர்களை தேடி போகிறோம் ( வரவைக்கிறார்கள் ).....இந்த 30 நாள் பயணம் நிச்சயமா  மாற்றம் கொடுக்கும், 


 கழிவு நீக்கம்....


இதைபற்றி கொஞ்சம் பேசலாம்....தினமும் பல் விலக்கி, மலம் நீக்கி, குளித்தால் இன்று உடல் கழிவுகளை போயிடுச்சு என நினைக்கிறோம், ஆனால் முழுமை இல்லை என்கிறது இயற்கை வாழ்வியல்....


உடல் கழிவுகள்


கண் கழிவுகள்

மூக்கு கழிவு

வாய் கழிவு

சிறுநீர்

மலம்

வியர்வை

காதுகழிவு

மூச்சுகாற்று ( வெளிமூச்சு )

சளி

பித்தநீர்

தும்மல்

தலைகழிவு ( கெட்டநீர் )

இரைப்பை கழிவு

நீர்தாரா.... ( பெண்கள் )


இவையெல்லாம் கழிவு நீக்கங்கள், இதைபற்றி நாம் இந்த 5 நாட்களில் பார்க்கப்போகிறோம்......

ஏன் கழிவுநீக்கம்?

நம் முன்னோர்கள் வாழ்வில் கழிவுநீக்கம் அன்றாட வாழ்வியல், ஆனால் இன்று அதை நாம் நமக்கு தேவையானபடி மாற்றிவிட்டோம்,.....

கழிவுகளின் தேக்கம் பல நோய்களுக்கு காரணமாகிறது, கழிவு நீக்கம் சரியா இருந்தா இனிவரும் புதுபுது நோய்களுக்கு பயப்படாம எதிர்த்து நிற்கலாம், உடலும் குடலும் சுத்தமா இருந்தால் மனம் சுத்தமாகும், மகிழ்ச்சி நிறைந்திருக்கும்.....

முதலில் நாம் நாளை செய்யபோவது இரைப்பை சுத்தம்

கழிவுகளின் தேக்கமே நோய்

கழிவு நீக்கமே ஆரோக்கியம்

30 நாள் ஆரோக்கிய பயணம்... perfect health in natural way

அனைவருக்கும் வணக்கம் 🙏


 30 நாள் ஆரோக்கிய பயணம்... ஜூலை 1 முதல் ஆரம்பமாகிறது. 30 நாள் பயிற்சி.


முதல் 5 நாள் கழிவு நீக்கம்


அடுத்த 2 நாள் இயற்கை வாழ்வியல்......


அடுத்த 3 நாள் தற்சார்பு வாழ்வியல் பொருட்கள் தயாரிப்பு.....


அடுத்த 10 நாள் இயற்கை உணவுகள்....


இறுதி 10 நாள் பாரம்பரிய உணவுகள் பற்றிய பயிற்சியும், செய்முறை விளக்கங்களும்.....

Introduction

Day 1 இரைப்பை சுத்தம் 


இப்படிக்கு 

  நிர்வாகம் சார்பாக

அஜிதா வீரபாண்டியன்