நாளை ஒரு நாள் எனது வாழ்வியல் பயணம் live with traditional food for one full day இயற்கை வழி வீட்டுத் தோட்டம் - ஒரு தற்சார்பு வாழ்வியல் பயணம்

 அனைவருக்கும் வணக்கம்....


நாளை  ஒரு நாள் எனது வாழ்வியல் பயணம்.....நீங்களும் இணையலாம்...விரும்பினால்.....


* அதிகாலை அலாரம் இல்லாமல் எழுதல்

* இரண்டு டம்ளர் மண்பானை நீர் அருந்துதல்

* தோப்புகரணம் 10

* மூலிகை பல்பொடியில் பல்விலக்குதல்

* கற்றாழை குளியல்

* கண்களுக்கு ஒரு சூரிய குளியல்

* ஆசணங்கள், மூச்சுபயிற்சி, எதுவுமே முடியலயா....10 முறை ஓம் சொல்லலாம்

* நாமே தயாரித்த மூலிகை தேநீர் 

* புஸ்தக வாசிப்பு

* காலை உணவு அத்திப்பழ ஜூஸ்

* மதியம் 50% சாதம், 50% காய் ( மென்று உமிழ்நீரோடு உண்ணுதல் )

* பாரம்பரிய அரிசி பாயாசம் ( அரிசி, வெல்லம், தேங்காய்பால் )

* சூரிய அஸ்தமனத்திற்கு முன் உணவு....

* 16 மணிநேர விரதம் ஆரம்பம்....

* மனதிற்கு பிடித்த பாடல் கேட்பது, அல்லது பாரம்பரிய நடனம் ( நடனம், பாடல் நிகழ்காலத்தில் வாழவைக்கும் )......


நான் ரெடி...நீங்க 👆🤝


இயற்கை வழி வீட்டு தோட்டம் பயிற்சி - 3 தேதி: 19/06/2021 Topic: மண் வளம் அறிவோம் (Soil Science)

 இயற்கை வழி வீட்டு தோட்டம் பயிற்சி - 3☘️🍀🌿🌱🪴🎋🍃🌾

தேதி:  19/06/2021  

நேரம்:3:30 PM to 5:00 PM

Topic: மண் வளம் அறிவோம் (Soil Science)

நடத்துபவர்: திரு. பலராமன் மானேரி

இயற்கைவழி வீட்டுதோட்டம் /Seed Island விதை தீவு

பயிற்சி ஒருங்கிணைப்பாளர்கள்

Mrs. Ajitha Veerapandian

Mrs. Akila Kunalan

Mrs. Priya Rajnarayanan 

ஒவ்வொரு வாரமும் நடைபெறும். அனைவரும் பங்கேற்று வீட்டுக்கு ஒரு விவசாயி ஆகலாம்

குறிப்பு: பயிற்சி சரியாக 3.30 PM ஆரம்பித்து  5 PM முடிந்து விடும்.

SeedsIsland Team is inviting you to a scheduled meeting.



https://youtu.be/XSWHLCCtbpI


Or


Join Zoom Meeting

https://us02web.zoom.us/j/9470331037?pwd=aDR0bi9NeFN1ME9sZ1VkQ2dqL0JHdz09


Meeting ID: 947 033 1037

Passcode: nF5j3H

Or

https://www.facebook.com/seedisland.seedisland/

சர்வ சுகந்தி மரம் Pimenta dioica | மருத்துவ பயன்கள் நிறைந்த சர்வ சுகந்தி மரம் | Allspice: Health Benefits | What are the health benefits of pimento?

சர்வ சுகந்தி மரம்  Pimenta dioica

    மேற்கிந்திய தீவுகள், (ஜமைக்கா)    உன் தாயகம்!.     உணவில் நறுமணம் கூட்டும் உன்னத இலை மரம் நீ! 59.அடி வரை வளரும் அழகு மரம் நீ!   குளிர் பிரதேசங்கள் உன் கூடாரம்! சோம்பு, ஏலக்காய்,கிராம்பு, பட்டை இவைகளின் நறுமணங்களை நீ தருவதால் ‘ஆல் ஸ்பைஸ்’ மரமானாய்!.

    அமெரிக்க,ஐரோப்பிய நாடுகள் எனப் பல்வகை நாடுகளில் சமையலில் பயன்படும் இலை மரம் நீ!  ஆல் மசாலா, பலமசாலா,ஜமைக்காய் பெப்பர்  எனப்பல்வகைப்பெயர்களில் விளங்கும் நல்வகை மரம் நீ!ஜீரணசக்தி,

    வயிற்றுவலி,பல்வலி, மலச்சிக்கல்,தோல் வியாதி,வாய் துர்நாற்றம், வாயுத்தொல்லை,முடி வளர்ச்சி, உடல் ஆரோக்கியம்,எலும்பு முறிவு,ரத்த சர்க்கரை அளவு குறைப்பு,நீரிழிவு, இதய நலம்,வளர்சிதை மாற்றம் ஆகியவற்றிற்கு ஏற்ற அற்புத நிவாரணி நீ!    பிரியாணி சாப்பாட்டுக்குப் பெருமை சேர்க்கும் நறுமண நல்மரமே!

    தென்னந்தோப்புகளில் வளர்க்கப்படும் ஊடுபயிரே! ஐந்து ஆண்டுகளில் பலன் கொடுக்கும் வேளாண் மரமே!   விதைகள் &பதியன் முறை மூலம் இனப்பெருக்கம் செய்யும் இனிய மரமே!மிளகு வடிவ கனி கொடுக்கும் இலை மரமே!பச்சைநிற காய் கொடுக்கும் பசுமை மரமே!வீட்டுத் தோட்டங்களில் வளர்க்கப்படும் நாட்டு மரமே!நறுமணம் மிகுந்த கற்பகமே!இரும்புசத்து,பொட்டாசியம்,தாமிர சத்து மிகுந்த மருந்து மரமே!