தமிழ்உச்சரிப்பு சரியாக வர சில தமிழ் வார்த்தைகள்

 உங்களுக்குத் தெரிந்த தமிழ் வார்த்தை விளையாட்டினை பகிரலாமே..

ஆரல்வாய் மொழிக் கோட்டையிலே ஆழாக்கு உழக்கு நெல்லுக்கு ஏழு வாழைப்பழம். கடலோரத்தில் உரல் உருளுது, புரளுது, தத்தளிக்குது, தாளம் போடுது. யார் தச்ச சட்டை, தாத்தா தச்ச சட்டை ஊழிக்காற்று,பாழும் கிணறு, கூழைக்குடி. வாழைப்பழத் தோல் சறுக்கி ஏழைக் கிழவன் கீழே விழுந்தான். பச்சைக் குழந்தை வாழைப் பழத்திற்காக விழுந்து விழுந்து அழுதது. கொக்கு நெட்ட கொக்கு, நெட்ட கொக்கு இட்ட முட்ட கட்ட முட்ட. வியாழக்கிழமை கிழட்டு ஏழை கிழவன் வாழைப் பழத்தில் வழுக்கி விழுந்தான். வாழைப் பழம் வழுக்கி கிழவி வழியில் நழுவி கீழே விழுந்தாள் ஓடற நரியில ஒரு நரி கிழ நரி கிழநரி முதுகுல ஒரு பிடி நரை முடி கடலோரத்தில் அலை உருளுது பிரளுது தத்தளிக்குது தாளம் போடுது யாரு தெச்ச சட்டை தாத்தா தெச்ச சட்டை ஆனை அலறலோடு அலற அலறியோட கடலோரம் உரல் உருளுது. கடலோரம் உரல் உருளுது! புட்டும் புதுப் புட்டு தட்டும் புதுத் தட்டு புட்டைக் கொட்டிட்டு தட்டைத் தா. வீட்டுக்கிட்ட கோரை வீட்டுக்கு மேல கூரை கூரை மேல நாரை. துள்ளும் கயலோ வெள்ளம் பாயும் உள்ளக் கவலை எள்ளிப் போகும். கருகும் சருகும் உருகும் துகிரும் தீயில் பட்டால்!✍🏼🌹

அளவு முறைகள் Tamilan Scale

 ஒரு பலம் = முப்பத்தி ஐந்து கிராம்.

ஒரு வீசை = ஆயிரத்தி நானூறு கிராம். இருபத்தி நான்கு நிமிடங்கள் = ஒரு நாளிகை. இரெண்டரை நாழிகை = ஒரு மணி.

அளவைகள் உளுந்து (grain) – 65 மி. கி. குன்றிமணி - 130 மி. கி. மஞ்சாடி - 260 மி.கி. மாசம் - 780 மி.கி. பனவெடை - 488 மி.கி வராகனெடை - 4.2 கி. கழஞ்சு - 5.1 கி. பலம் - 41 கி. (35 கி.) கஃசு அல்லது கைசா - 10.2 கி. தோலா - 12 கி. ரூபாவெடை - 12 கி. அவுன்ஸ் - 30 கி. சேர் - 280 கி. வீசை - 1.4 கி.கி. தூக்கு - 1.7 கி.கி. துலாம் - 3.5 கி.கி
32 குன்றிமணி 1 வராகன்(வராகனெடை) 1.067 கிராம் 10 வராகனெடை 1 பலம் 10.67 கிராம் 8 பலம் 1 சேர் 85.33 கிராம் 5 சேர் 1 வீசை 426.67 கிராம் 1000 பலம் 1 கா 10.67 கிலோகிராம் 6 வீசை 1 துலாம் 2.560 கிலோகிராம் 8 வீசை 1 மணங்கு 3.413 கிலோகிராம் 20 மணங்கு 1 கண்டி (பாரம்) 68.2667 கிலோகிராம்

கரண்டி அளவுகள் 1 தேக்கரண்டி - 4 மி.லி 1 குப்பி - 175 தேக்கரண்டி ( 700 மி.லி) 1 தீர்த்தக்கரண்டி - 1.33 மி.லி 1 நெய்க்கரண்டி - தேக்கரண்டி (4.0 மி.லி) 1 உச்சிக்கரண்டி - 4 தேக்கரண்டி (16 மி.லி) 1 மேசைக்கரண்டி - 4 தேக்கரண்டி (16 மி.லி) 1 பாலாடை - 30 மி.லி 1 எண்ணெய்க்கரண்டி - 8 பாலாடை (240 மி.லி)

அன்பும் பண்பும் பாரம்பரியமும் நிறைந்த ஒரு மூத்த சகாப்தம் முடிவுக்கு வர இருக்கிறது.

 அன்பும் பண்பும் பாரம்பரியமும் நிறைந்த ஒரு மூத்த  சகாப்தம் முடிவுக்கு வர இருக்கிறது.


வரும் 10/15 ஆண்டுகளில் அன்பாலும் பாசப்பிணைப்பாலும் கட்டமைக்கப்பட்ட மற்றும் தர்மத்திற்கு கட்டுப்பட்ட ஒரு மூத்த தலைமுறை உலகை விட்டு போக இருக்கிறது.


இந்த தலைமுறை மக்கள் முற்றிலும் வேறுபட்டவர்கள்.!


இவர்கள் இரவில் சீக்கிரம் தூங்குபவர்கள், அதிகாலையில் சீக்கிரமே எழுபவர்கள்,

 காலையில் நடை பயிற்சிக்கு செல்பவர்கள்

வீட்டு தோட்டம், செடிகளுக்கும் தண்ணீர் விடுப்பவர்கள், கருவேப்பிலை, பச்சை மிளகாய், மருதாணி, செம்பருத்தி தன் வீட்டிலேயே வளர்ப்பவர்கள்.

கடவுளை வழிபடுவதற்காக தானே பூக்களைப் பறித்து பிரார்த்தனை செய்பவர்கள்...!


தினமும் கோவிலுக்குச் செல்பவர்கள்,

வழியில் சந்திப்பவர்களுடன் பேசுபவர்கள், அவர்களின் மகிழ்ச்சியையும், துயரத்தையும் விசாரிப்பவர்கள், இரு கைகளை கூப்பி வணக்கம் தெரிவிப்பவர்கள்...!


வழிபாடு இல்லாமல் உணவை எடுத்துக்கொள்ளாதவர்கள்...


அவர்கள் உலகம் வித்தியாசமான உலகம், அவர்களும் வித்தியாசமானவர்கள்...


திருவிழாக்கள், விருந்தினர் உபச்சாரம், உணவு, தானியங்கள், காய்கறிகள், அக்கறை, யாத்திரை, பழக்கவழக்கங்கள் அவர்களின் அனைத்துமே எதார்த்தமாகவும், மனிதநேயத்தோடும், இயற்கையாகவும், எந்தவிதமான நாடகத்தன்மையும் கலவாமல் இருக்கும்...


லேண்ட் லைன் தொலைபேசி மீது அலாதி பிரியம் கொண்டவர்கள்..! தொலைபேசி எண்களை மனப்பாடமாகவும், டைரியிலும் பராமரிக்கும் பழக்கம் உடையவர்கள்.. முகவரியை தெளிவாக கூறுவார்கள். முடிந்தால்  அழைத்துச் சென்று காட்டுவார்கள்.


ஒரு நாளைக்கு இரண்டு-மூன்று முறை செய்தித்தாளைப் படிப்பவர்கள்...


எப்போதும் ஏகாதசி, அமாவாசை மற்றும் பௌர்ணமி நினைவில் வைத்து கொள்பவர்கள் இந்த மக்கள்... கடவுள் மீது வலுவான நம்பிக்கை உள்ளவர்கள், குடும்ப, சமூக அக்கறை பயம் உள்ளவர்கள்...


தைத்து பராமரிக்கப்பட்ட பழைய செருப்புடன் உலா வருபவர்கள், பனியன், பெரிய கண்ணாடி என மிக எளிய தோற்றத்தில் உலா வருபவர்கள்....


கோடையில் ஊறுகாய், வடாம் தயாரிப்பவர்கள், வீட்டில் உள்ள உரலில் இடித்த மசாலாப் பொருள்களைப் பயன்படுத்துபவர்கள்...


விடியற் காலையில் எழுந்து வாசல் தெளித்து கோலம் போட்டு அவர்களே தங்கள் கைகளாலேயே வீட்டைப்பெருக்கி, ஒட்டடை அடித்து வீட்டை சுத்தபத்தமாக வைத்திருப்பவர்கள்...!


எப்போதும் நாட்டு மாட்டுப்பால், தக்காளி, கத்திரிக்காய், வெந்தயம், கீரைகளைத் தேடி தேடி வாங்குபவர்கள்...


இவர்கள் அனைவரும் நம்மை மெதுவாக விட்டு செல்ல இருக்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா...?


உங்கள் வீட்டிலும் இப்படி யாராவது இருக்கிறார்களா..? ஆம் எனில், நீங்கள் மட்டுமே மிகவும் கொடுத்துவைத்தவர்கள் ! அவர்களை மிகவும் அன்பாக கவனித்துக் கொள்ளுங்கள்...! மரியாதை கொடுங்கள்,


 அவர்களிடம் வாழ்வியலை கற்று கொள்ளுங்கள்.


இல்லையெனில் அவர்களுடன் ஒரு முக்கியமான வாழ்வியல் என்னும் அதிமுக்கிய வாழ்க்கைப்பாடம் அழிந்தே போய்விடும்....

 அதாவது,மனநிறைவு, எளிமையான வாழ்க்கை, உத்வேகம் தரும் வாழ்க்கை, கலப்படம் மற்றும் புனைவு இல்லாத வாழ்க்கை, நமது கலாச்சாரத்தின் வழியைப் பின்பற்றும் வாழ்க்கை மற்றும் அக்கறையுள்ள ஒரு ஆத்மார்த்தமான வாழ்க்கை எல்லாம் அவர்களுடன் மறைந்து விடும்...


உங்கள் குடும்பத்தில் யார் மூத்தவராக இருந்தாலும், அவர்களுக்கு மரியாதை, நேரம் மற்றும் அன்பு கொடுங்கள். 


நம்முன்னோர்களே நமது அடையாளம், நமது முகவரி, மற்றும் நமது பெருமை, நம் கடமை 


🙏🙏🙏.


தனிமனித வாழ்வியில் சடங்குகள் மட்டுமே பல குற்றங்களை தடுக்க முடியுமே தவிர, அரசாங்கத்தால் மட்டுமே முழுமையாக தடுக்க இயலாது...!


 இயற்கையோடு ஒன்றி வாழ முயற்சிப்போம்.

ஆரோக்கியம் பேணுவோம்.

உடல் நலனிற்கு முக்கியத்துவம் தருவோம்.

பாரம்பரியத்தை தூக்கிச்செல்லும் கலாச்சாரக் காவலராவோம்.

பெரியவர்களை மதிப்போம் 


🙏🏻🙏🏻🙏🏻