Showing posts with label tamil grammer. Show all posts
Showing posts with label tamil grammer. Show all posts

இன்பத் தமிழ்...! குண்டக்க என்றால் என்ன? மண்டக்க என்றால் என்ன? Power of Tamil Language


1. அந்தி, சந்தி: 


அந்தி : மாலை நேரத்திற்கும் , இரவுக்கும் இடையில் உள்ள பொழுது. 

சந்தி: இரவு நேரத்திற்கும் , காலை நேரத்திற்கும் இடையில் உள்ள விடியல் பொழுது.


 2. அக்குவேர், ஆணிவேர் :


அக்குவேர் : செடியின் கீழ் உள்ள மெல்லியவேர். 

ஆணி வேர்: செடியின் கீழ் ஆழமாக செல்லும் வேர்.


3. அரை குறை:


அரை : ஒரு பொருளின் சரி பாதி அளவில் உள்ளது.

குறை : அந்த சரிபாதி அளவில் குறைவாக உள்ளது.


 4. அக்கம், பக்கம்:


அக்கம்: தன் வீடும், தான் இருக்கும் இடமும்.

பக்கம்: பக்தத்தில் உளவீடும், பக்கத்தில் உள்ள இடமும்.


5. அலுப்பு சலிப்பு :


அலுப்பு: உடலில் உண்டாகும் வலி.

சலிப்பு: உள்ளத்தில் ஏற்படும் வெறுப்பும், சோர்வும்.


 6. ஆட்டம் பாட்டம் :


ஆட்டம் : தாளத்திற்கு தகுந்தவாறு ஆடுவது.

பாட்டம் : ஆட்டத்திற்குப் பொருத்தமில்லாமல் பாடுவது.


7. இசகு பிசகு:

 

இசகு: தம் இயல்பு தெரிந்து ஏமாற்றுபவர்களிடம் ஏமாறுதல்.

பிசகு: தம்முடைய அறியாமையால் ஏமாறுதல்.


8. இடக்கு முடக்கு: 


இடக்கு : கேளியாக நகைத்து, இகழ்ந்து பேசுதல்.

முடக்கு : கடுமையாக எதிர்த்து, தடுத்துப் பேசுதல்.


9. ஏட்டிக்குப் போட்டி :


ஏட்டி: விரும்பும் பொருள் அல்லது செய்வது. ( ஏடம் : விருப்பம்) போட்டி : விரும்பும் பொருள், செயலுக்கு எதிராக வருவது.


10. ஒட்டு உறவு : 


ஒட்டு : இரத்த சம்பந்தம் உடையவர்கள்.

உறவு : கொடுக்கல் சம்பந்தமான வகையில், நெருக்கமானவர்கள்.


11. கடை கண்ணி :


கடை: தனித் தனியாக உள்ள வியாபார நிலையம்.

கண்ணி : தொடர்ச்சியாக அமைந்த கடைகள் , கடை வீதிகள்.


12. கார சாரம் : 


காரம் : உறைப்பு சுவையுள்ளது.

சாரம்: காரம் சார்ந்த சுவையுள்ளது.


13. காடு கரை :


காடு : மேட்டு நிலம் (முல்லை). 

கரை : வயல் நிலம் .( மருதம், நன் செய் , புன்செய்).


14.காவும் கழனியும்:


கா : சோலை.

கழனி: வயல். (மருதம் ).


15. கிண்டலும் கேலியும்: 


கிண்டல் : ஒருவன் மறைத்த செய்தியை அவன் வாயில் இருந்து வாங்குவது.

கேலி : எள்ளி நகைப்பது.


16. குண்டக்க மண்டக்க :


குண்டக்க : இடுப்புப்பகுதி, 

மண்டக்க: தலைப் பகுதி,

சிறுவர்கள் கால் பக்கம், தலைப்பக்கம் எது எனத் தெரியாமல் தூக்குவது,

வீட்டில் அந்தந்தப் பொருள் அங்கங்கே இருக்க வேண்டிய இடத்தில் இல்லாமல் இருப்பது.


17. கூச்சல் குழப்பம்:


கூச்சல் : துன்பத்தில் சிக்கி வாடுவோர் போடும் சத்தம். (கூ - கூவுதல்)

குழப்பம்: துன்பத்தின் மத்தியில் உண்டாகும் சத்தத்தைக் கேட்டு, வந்தவர்கள் போடும் சத்தம்.


18. சத்திரம் சாவடி :


சத்திரம் : இலவசமாக சோறு போடும் இடம் ( விடுதி ).

சாவடி: இலவசமாகத் தங்கும் இடம்.

 

19.தோட்டம் துரவு , தோப்பு துரவு :


தோட்டம் : செடி, கொடி, கீரை பயிரிடப்படும் இடம்.

தோப்பு : கூட்டமாக இருக்கும் மரங்கள்.

துரவு: கிணறு.


20. நகை நட்டு :


நகை : பெரிய அணிகலன்கள் (அட்டியல், ஒட்டியாணம்.)

நட்டு : சிறிய அணிகலன்கள்.


21. நத்தம் புறம்போக்கு :


நத்தம் : ஊருக்குப் பொதுவான மந்தை...

புறம்போக்கு : ஆடு, மாடு மேய்வதற்கு அரசு ஒதுக்கிய நிலம்.


22. நேரம் காலம் :


நேரம் : ஒரு செயலைச் செய்வதற்கு நமக்கு வசதியாக அமைத்துக் கொள்வது.

காலம் : ஒரு செயலைச் செய்வதற்கு பஞ்சாங்க அடிப்படையில் செய்ய முற்படும் கால அளவு.


23. நொண்டி நொடம் :


நொண்டி : காலில் அடிபட்டோ, குறையால் இருப்பவர்.

நொடம் : கை, கால் செயலற்று இருப்பவர்.


24. பற்று பாசம் :


பற்று : நெருக்கமாக உறவு கொண்டுள்ளவர்கள்.

பாசம் : பிரிவில்லாமல் மரணம் வரை சேர்ந்து இருப்பது...


25. பழக்கம் வழக்கம் :


பழக்கம் : ஒருவர் ஒரே செயலைப் பல காலமாகச் செய்வது.

வழக்கம் : பலர் ஒரு செயலைப் பலகாலம் (மரபுவழியாக ) கடைப்பிடித்துச் செய்வது.


26. பட்டி தொட்டி :


பட்டி: கால்நடைகள் (ஆடுகள்) வளர்க்கும் இடம் (ஊர்).

தொட்டி : மாடுகள் அதிமாக வளர்க்கும் இடம்.


27. பேரும் புகழும் : 


பேர் : வாழ்ந்து கொண்டிருக்கும் காலத்தில் உண்டாகும் சிறப்பு பெருமை. 

புகழ்: வாழ்விற்குப் பிறகும் நிலை பெற்றிருக்கும் பெருமை.


28. பழி பாவம் :


பழி: நமக்குத் தேவையில்லாத , பொருத்தமில்லாத செயலைச் செய்தால் இக்காலத்தில் உண்டாகும் அபச் சொல்.

பாவம் : தீயவை செய்து மறுபிறப்பில் நாம் அனுபவிக்கும் நிகழ்ச்சி.


29. பங்கு பாகம்:


பங்கு: கையிருப்பு. பணம், நகை, பாத்திரம்.( அசையும் சொத்து).

பாகம் : வீடு, நிலம். அசையாச் சொத்து.


30. பிள்ளை குட்டி:


பிள்ளை : பெதுவாக ஆண் குழந்தையைக் குறிக்கும்.

குட்டி: பெண் குழந்தையைக் குறிக்கும்.


31. வாட்டம் சாட்டம் :


வாட்டம் : வளமான தோற்றம், வாளிப்பான உடல்.

சாட்டம் : வளமுள்ள தோற்றம், தோற்றப்பொலிவு.

படித்ததில் பிடித்தது