Showing posts with label rain. Show all posts
Showing posts with label rain. Show all posts

மழை பற்றிய சகுனங்கள் When rain will come? What happens before rain?

 மழை பற்றிய சகுனங்கள்...

----------------------------------------

கீழ்கண்ட சகுனங்கள் தோன்றினால் மழை வரும்.


1. தும்பி பறந்தால் தூரத்தில் மழை

2. தட்டான் தாழப் பறந்தால் மழை

3. அந்தி ஈசல் அடை மழை

4. எறும்பு முட்டை கொண்டு திட்டை ஏறினால் மழை.

5. தவளை கத்தினால் மழை

6. மாடு மயங்கி வானம் பார்த்தால் மழை

7. கொக்கு மேடேறினால் மழை

8. பகற்பொழுதில் சேவல் கூவி வானத்தைப் பார்த்தால் மழை

9. கழுதை காதை உயர்த்தினால் மழை

10. ஈசல் பறந்தால் மழை

11. புற்றிலே ஈசல் பறந்தாலும், மண்ணிலே கரையான் கூடினாலும் மழை

12. பாம்புகள் மரத்தில் ஏறினாலோ அல்லது திறந்த வெளியில் புணர்ச்சியில் ஈடுபட்டாலோ மழை 

13. பசு மாடுகள் கன்றைத் தேடி வீட்டிற்கு ஓடினால் மழை.

14. பூனைகள் நிலத்தை பிராண்டினால் மழை

15. குழந்தைகள் அணைக்கட்டி விளையாடினால் மழை 

16. மலைகள் நீல நிறமாக காட்சியளித்தால் மழை

17. குகைகள் பனிமூட்டத்தால் மறைக்கப்பட்டிருந்தால் மழை

18. ஓணான்கள் வானத்தைப் பார்த்தால், மரத்தில் ஏறி விளையாடினால் மழை

19. பூனை, எலி, பாம்பு முதலிய பிராணிகள் காரணமின்று அங்குமிங்கும் ஓடினால் மழை.

20. மயில்கள் நடனமாடினால் மழை

21. பசுக்கள் சூரியனையும் ,வானத்தையும் பார்த்தால் மழை

22. பச்சோந்திகள் மரத்தின் மீது அமர்ந்து தன் நிறத்தை மாற்றிக்கொண்டால் மழை

23. பசுக்கள் நிழலிடங்களை விட்டு நகர மறுத்தால் மழை

24. நாய்கள் வீட்டிற்கு வெளியே செல்ல மறுத்தால், வானத்தைப் பார்த்து குரைத்தால் மழை

25. சிட்டுக்குருவிகள் மண்ணில் புரண்டு விளையாடினால் மழை

26. மீன்கள் நீரில் துள்ளி விளையாடினால் மழை.

27. பறவைகள், மிருகங்கள் நுனிப்புல் உண்பதைக் கண்டால் மழை.

28. நீரின் சுவை மாறுதல், உப்பு நீர்த்துப் போதல், மோர் புளித்து போதல் நடந்தால் மழை.

29. இரும்பு பொருட்களிலிருந்து மாமிச வாடை வந்தால் மழை

30. சந்திரனை சுற்றி சிவப்பு நிற வளையம் காணப்பட்டால் அல்லது சந்திரனின் நிறம் கோழியின் கண் போன்று காணப்பட்டால் மழை.

31. வட கிழக்கில் மின்னல் தோன்றினால் மழை

32. மேகங்களால் மறைக்கப்பட்ட சந்திரனிலிருந்து பிரதி சந்திரன் தோன்றினால் மழை

33. இரவு நேரங்களில் இடி முழங்கினால், பகல் நேரத்தில் மின்னல் அடித்தால், கிழக்கு திசையிலிருந்து குளிர்ந்த காற்று வீசினால் மழை.

நம் இயற்கையை கண்டறிந்த இயற்கை ஞானிகளை போற்றுவோம்.