கஸ்தூரி வெண்டை அதிக மருத்துவ குணங்கள் கொண்டது என்று கூறுகிறார்கள்.
இதில் இரண்டு வகை உள்ளது.
பெரிய ரகம் நட்சத்திர பழத்தின் அமைப்பை பெற்றிருக்கும். மற்றொரு ரகம் ஒரு அங்குல நீளம் வரும். சாதாரண வெண்டையின் பிஞ்சு போல் இருக்கும்.
இரண்டுமே வெண்டையின் சுவையை கொண்டதாக இருக்கும். பெரிய ரகத்தில் ஒரு மென்மையான கசப்பு தன்மை இழையோடும். சிறியது அப்படியே வெண்டையின் சுவையை கொண்டிருக்கும். பசுமையாக (salad) உண்ணலாம், சமையலிலும் சேர்க்கலாம்.
சிறிய ரகத்தை விட பெரிய ரகத்தில் அதிக காய்ப்பு இருக்கும்.
சிறிய ரகத்தில் செடியிலும் காயிலும் அதிக சுனை கொண்டிருக்கும். கிளைகள் வளைந்து நெளிந்து வளரும்.