Showing posts with label danger. Show all posts
Showing posts with label danger. Show all posts

இலைத்தேள் கடியும் அதன் வைத்திய முறையும் the truth behind the leaf scorpion viral video

ஜெனி கார்த்திக்கு  நிகழ்ந்த அனுபவம்🌿🌿

இடம்: லைபீரியா


நம் குழுவிலேயே இதற்கு முன் இளைத்தேள் என ஒரு காணொளி சுற்றிக் கொண்டிருந்தது.. அதில் சில உண்மையும் இருக்கிறது..


கை வைத்தியம் :

--------------------

நேற்று என் மனைவியுடன் தொலைபேசியில் பேசிக் கொண்டே வீட்டு தோட்டத்தில் களை எடுத்துக் கொண்டிருந்தேன். அந்த இடத்தில் மிளகுக் கொடி, கொடி ரோஜா, பிரண்டை, சிவப்பு பசலை, தரையில் இஞ்சி என அனைத்தும் புதராக இருந்தது.


திடீரென்று கையில் மின்சாரம் பாய்ந்தது போல ஒரு உணர்வு மற்றும் 2-3 குளவிகள்/தேனீக்கள் ஒன்றாக கொட்டியது போன்ற ஒரு வலி.  முதலில் கட்டெறும்பு கடித்து இருக்குமோ என்றுதான் எண்ணினேன் ஆனால் கையை இலைச் சருகுகளுக்கிடையே  கொண்டு சென்று எடுத்த அந்த கண்சிமிட்டும் நேரத்தில் கடித்திருக்க வாய்ப்பு இல்லை. ஒருவேளை பாம்பு எதுவும் கடித்து இருக்குமோ என பார்த்தால் கையில் பல் தடமும் இல்லை. வலி மோதிர விரல் நடுவிரல் மற்றும் கட்டை விரலில். 


சுற்றி முற்றி பார்த்தால் எந்த பூச்சியும் தென்படவில்லை. தேனீ கடந்தை குளவி என எதுவும் இல்லை. அரை மணி நேரம் கழித்தும் வலி அடங்க வில்லை. நெறிகட்டுவது போல ஒரு உணர்வு ஏற்பட்டது.  உடனே என் சித்த வைத்திய நண்பருக்கு அழைப்பு விடுத்து என்னவாக இருக்கும் என வினவினேன் அவரும் நிச்சயமாக இது இலைத் தேளாக  இருக்க அதிக வாய்ப்புள்ளது என கூறினர். 




அது என்ன இலைத்தேள்..🤔🤔 


அவரும் விவரித்தார் இது பச்சை நிறத்தில் இருக்கும் இலையின் கீழ் பகுதியில் இருக்கும்  (ஞான திருஷ்டி தான்)  


நானும் களை எடுத்த இடத்தில் சென்று உற்றுநோக்கி தேடியதில் பிரண்டை இலையின் அடிப்பகுதியில் மேலே படத்தில் இருக்கும் கம்பளிப்பூச்சியை பார்த்தேன். இது ஒரு அந்து பூச்சியின் புழுவாகும் (முதல் படத்தில் இருப்பது) பார்த்தவுடன் அதன் அழகில் மயங்கி விட்டேன் அவ்வளவு அழகிய டிசைன்.. ஆனால் அழகு ஆபத்து தானே 😀😀


அதன் உடம்பு பூராவும் முடிகள் கூரிய முள் போன்று இருந்தது. அதனுடன் எந்த ஒரு உராய்வு ஏற்பட்டாலும் உடனடியாக கையில் கடுமையான வலி எடுக்கும் ஏனென்றால் அதன் விஷத்தன்மை அப்படி. 


ஆனால் எதுவும் பயப்படத் தேவையில்லை உடனடி கை வைத்தியமாக வெற்றிலையும் மிளகும் மென்று விழுங்க கூறினார். இல்லையென்றால் தும்பை செடியின் தழை/சிறியாநங்கை/பெரியாநங்கை/ஆடு தீண்டா பாழை/ஆடாதோடை என பல கை வைத்தியங்கள்.. 

பாதிக்கப்பட்ட இடத்தில்  சுண்ணாம்பு/ எருக்கன் பால் தேய்க்குமாறு அறிவுறுத்தினார். 


ஆனால் நான் லைபீரியாவில் வசிப்பதால் இவை எதுவும் என் அருகாமையில் இல்லை.


இவை எதுவும் இல்லாததால் அடுத்த கை மருந்தாக மிளகும் வேப்பிலையும் மென்று விழுங்க கூறினார். 

இரண்டையும் ஒருசேர மென்று விழுங்கவும் அரை மணி நேரத்தில் நெறி கட்டுவது குறைந்துவிட்டது. ஆனால் வலி குறையவில்லை. சுண்ணாம்பு இல்லாததால் பாதிக்கப்பட்ட இடத்தில் நம்  சிறுநீர் வைக்கச் சொன்னார். சிறுநீர் வைத்ததில் பெரிதாக வலி குறையவில்லை 'விண் விண்ணென்று' என்று தெறித்துக் கொண்டிருந்தது. 

அவசரத்திற்கு நம் சிறுநீரும் பாதிக்கப்பட்ட இடத்தில் படும்பொழுது விஷத்தை முறிக்க வல்லது.  


பொதுவாக இதுபோன்ற வலி இருந்தாலும் 24 மணி நேரத்தில் தன்னால் சரியாகிவிடும் என்பது பூச்சிக்கடியில் எழுதப்படாத விதி. 


(இதற்கு நடுவில் இந்த விஷயத்தை கேட்டு பதறிய என் மனைவியிடம் இருந்து ஏகப்பட்ட  பேச்சுகள் வேற 😀😀 )


இரண்டு மணி நேரம் ஆகியும் வலி குறையாததால் லைபீரிய நண்பரின் உதவியை நாடினேன். இங்கு இவர்களது கை வைத்தியம் இதுபோன்ற வலிக்கு நிவாரணமாக அந்த கம்பளிப் பூச்சியின் எச்சத்தை எடுத்து பாதிக்கப்பட்ட இடத்தில் தடவினால் நிவாரணம் கிடைக்கும் எனக் கூறினார். 


திரும்பவும் செடியில் போய் தேடினால் கம்பளிப்பூச்சியை காணோம்.. ஐந்து நிமிட தேடலுக்குப் பின் அந்த கம்பளிப் பூச்சியின் பங்காளியான இன்னொரு கம்பளிப்பூச்சியை கண்டுகொண்டேன் (இரண்டாம் படத்தில் இருப்பது)

நண்பரும் விரைவாக அந்த கம்பளிப்பூச்சியை நசுக்கி அதன் எச்சங்களை என் விரல்களில் தேய்த்து விட்டார். இதை தேய்த்த அடுத்த பத்தாவது நிமிடத்தில் அதுவரை விண் விண்ணென்று தெறித்துக் கொண்டிருந்த வலி மெதுவாக குறைய தொடங்கியது. அந்த இடத்தில் அதுவரை நிலவிய உஷ்ணம் குறைந்தது.


அரை மணி நேரத்தில் வலி முற்றிலுமாக காணாமல் போனது. 


கை வைத்தியத்தை தெரிந்து கொள்வோம்.. மிளகும் வெற்றிலையும் எப்பேர்ப்பட்ட விஷக்கடியையும் முறித்துவிடும்.. பாதிக்கப்பட்ட இடத்தில் சுண்ணாம்பு அல்லது எருக்கம்பால்.. 


உங்களுக்கு தெரிந்த கைவைத்தியம் இருந்தாலும் கீழே குறிப்பிடுங்கள்.

மிகவும் நன்றி  🙏


Couldn't identify the species though.. Closely related to Nettle slug caterpillar