Showing posts with label body. Show all posts
Showing posts with label body. Show all posts

கண் நலம் for better eye sight


கண் நம் உடலில் முக்கியமான ஒரு உறுப்பு, அழிவு என்பது இல்லாத ஒரு உறுப்பு எது என்றால் அது கண், இறப்பிற்குபின் அழியும் இந்த உடலில், கண் மட்டும் ஒரு மனிதனின் இறப்பிற்கு பின்பும் வாழும் திறன் பெற்றுள்ளது, இந்த அழகிய அற்புதமான படைப்பை இந்த பிரபஞ்சம் நமக்கு கொடுத்திருக்கிறது, அந்த பொக்கிஷத்தை  காப்பது நம் கடமை, அவசியமும் கூட.....கண்கள் பேசும் ( அனைவரும் அறிந்தததே)......


 * கண், கல்லீரல், பித்தப்பை, ஜீரணம் இவற்றில் ஒன்றின் பாதிப்பு மற்றொன்றை பாதிக்கும், 


* கோபம் 👆 இந்த நான்கையும் பாதிக்கும்


* கழிவு தேங்கினால் கண் நோய் ஏற்படும்


* கழிவு நீக்கம் செய்ய நேத்ர சுத்தி...அதாவது கண்குவளை வைத்து சுத்தம் செய்யலாம், 


* அதிகாலை பல் விலக்காமல் நம் உமிழ்நீரை கண்ணில் விடலாம்


* கண் சிமிட்டுவது மிக அவசியம், நாம் கண்களை சிமிட்டாமல் இருக்கும் நேரம் கைபேசிபார்ப்பது, தொலைகாட்சிபார்ப்பது


* சூரியயோகம்...அதாவது சூரிய உதயமாகி அடுத்த ஒரு மணிநேரம், சூரிய அஸ்தமனமாக முன் ஒரு மணிநேரம் பார்ப்பது கண் நலம் கொடுக்கும், 5 நிமிடம் பார்த்தால் போதுமானது


* கண் பட்டி....கண்ணில் புற்றுமண் அடைத்த துணி அல்லது தண்ணீரில் நனைத்த துணி போடலாம், கண்ணில் இரத்த ஓட்டம் சரியாகும், கண் புத்துணர்வு பெறும்


* திராடகம் பயிற்சி....அதிகாலை எரியும் விளக்கை பார்ப்பது, இதை தொடர்ந்து செய்யும்போது கண்ணாடியை விரைவில் கழட்டிவிடலாம்...5 நிமிடம் போதுமானது....பழகியபின் 20 நிமிடம் செய்யலாம் ( கண் கழிவு நீக்கும் )


கண் நலத்தின் உணவு


* நல்லபுளிப்பு, அதாவது திராட்சை, எலுமிச்சை, சாத்துக்குடி....புளியை சுட்டு பயன்படுத்தலாம்...


* கீழாநெல்லி வேரோடு மாதம் ஒரு முறை சாப்பிடவும்


* விதையுள்ள திராட்சை தினமும் ஒரு கைப்பிடி கண் நலம் காக்கும்.....


கண்ணாடி போட்டிருக்கும் ஒரு கண் தானாமாக மற்றவருக்கு பொருத்தியபின் கண்ணாடி போடபடுவதில்லை, உண்மை என்னவென்றால் கண் என்றுமே ஆரோக்கியமாக இருக்கிறது, நன்றி 🙏🎊