Showing posts with label Oil bathing. Show all posts
Showing posts with label Oil bathing. Show all posts

நாளை ஆண்கள் மூக்கு கழுவும் பயிற்சி!!! பெண்களுக்கு எண்ணெய்குளியல் !!! Nose cleaning for Men and Oil bathing tips for Female

 இந்த பொருள் நாளை ஆண்களுக்கு, நாளை மறுநாள் பெண்களுக்கு தேவைப்படும் வாங்கிக்கோங்க, பெண்கள் எனிமா கேன் சேர்த்து வாங்கிக்கோங்க, இவை மூன்றும் சேர்ந்தே விற்கிறாங்க, 100 முதல் 150 இருக்கும்.....👇




    இயற்கைவாழ்வியல் பொருட்கள் விற்கும் கடைகள், நாட்டுமருந்துகடை, ஆங்கில மருந்துகடைகளில் இவை மூன்றும் சேர்ந்தே கிடைக்கும்... கிடைக்கலனா சிரம படாதீங்க... கிடைக்கும்போது செய்யலாம் ...

அம்மி இயற்கை அங்காடி, காதிகிராப்ட் போன்ற கடைகளில் மூன்றும் சேர்ந்தே கிடைக்கும்...

நாளை ஆண்கள் மூக்கு கழுவும் பயிற்சி செய்யலாம், 👇 மூக்குகழுவும் குவளை வைச்சி செய்யனும், 

நுரையீரல் சம்மந்தமான நோய்கள் தீரும், 

சைனஸ், 
மூக்கடைப்பு, 
ஆஸ்துமா
நெஞ்சுசளி
வீசிங் சரியாகும்

சாதாரண லேசான சூடு உள்ள தண்ணீரில் 4 கல் உப்பு போட்டு அந்த மூக்குகுழாய் மூலம் மூக்கில் விட்டு சுத்தப்படுத்தனும்....செய்முறை விளக்கம் 👇
இந்த பயிற்சி 👆 நாளை ஆண்கள் செய்ங்க, இந்தபயிற்சியை நமக்கு செய்து காண்பிப்பவர் சகோதரி லலிதா சிவசங்கர், இயற்கைமருத்துவர்.



அனைவருக்கும் வணக்கம் 🙏



நாளை பெண்களுக்கு....

 எண்ணெய்குளியல் ( வெள்ளி, செவ்வாய் )

நல்லெண்ணெய் 100 ml, மிளகு 6, காய்ந்த மிளகாய் காம்பு குச்சி 6 ( குச்சிமட்டும்), ஒரு பல் பூண்டு, லேசா எண்ணெயை சூடுசெய்து அதில் மிளகு, மிளகாய் வத்தல் காம்பில் உள்ள குச்சி 6 , பூண்டு ஒரு பல் தட்டிபோட்டு, ஆறியதும் ...

தலை உச்சியில் 
காதுமடல்கள் முன் பின்
அக்குள்
தொப்புள்
ஆசணவாய்
கால்மூட்டு
கால்விரல் நகங்கள் 

👆 இவற்றில் எண்ணெய் தடவிட்டு மீதி உள்ளதை உடல் முழுவதும் தடவுங்க, அரைமணிநேரம் வெயிலில் நிற்கனும்.
அதாவது சூரியன் உதித்து ஒருமணிநேரத்திற்குள் உள்ள வெயில்,

 சுடு தண்ணீரில் குளிக்கனும், எதுவும் சாப்பிடும்முன் குளிக்கனும், சீயக்காய் போட்டு குளிச்சா நல்லது...

* ஒருமாத குழந்தை முதல் குளிக்கலாம்

எண்ணெய்குளியல் கூடாத நாட்கள்

மாதவிடாய், அமாவாசை, பெளர்ணமி, மழைபெய்யும்போது, பனிப்பொழிவில் வசிப்பவர்கள் கால் கட்டைவிரலில் எண்ணெய்வைச்சிட்டு குளிக்கலாம்.....

எண்ணெய்குளியல் அன்று கூடாத உணவுகள்

தயிர், மோர், குளிர்ந்த நீர், தரிபூசணி, குளிரூட்டியஅறை, தாம்பத்திய உறவும் கூடாது...

எண்ணெய்குளியல் அன்று உண்ணும் உணவுகள்

ரசம் சாதம், ஆவியில் வேகவைத்த இட்லி, இடியாப்பம்

எண்ணெய் குளியல் தீர்க்கும் நோய்கள்

கண்பார்வை தெளிவாகும்
பற்கள்பலப்படும்
தோல்நோய் குணமாகும்
நீர்கட்டிகள் மறையும்
தைராய்டு குணமாகும்
ஹார்மோன் சமநிலையடையும்


நாளை நாம்  செய்யலாம் 💐👍🎊